பேஸ்புக்கில் இருந்து வெளியேறும் பலர்.,டிரண்டாகும் #deletefacebook

deletefacebook-picks-up-in-tamil-nadu

தமிழகம் முழுவதும் #deletefacebook என்ற ஹேஸ்டேக் டிரண்டாகி பேஸ்புக்கில் இருந்து பலரும் வெளியேறி வருகின்றனர்.

பல்வேறு நாடுகளின் தேர்தல் மற்றும் விளம்பர யுக்திகளுக்கு பேஸ்புக் தனிநபர் அக்கவுண்டை தவறாக பயன்படுத்திக் கொள்கிறது என்று எழுந்த குற்றச்சாட்டை அடுத்து #deletefacebook என்ற ஹேஸ்டேக் டிரண்டாகி பேஸ்புக்கில் இருந்து பலரும் வெளியேறி வருகின்றனர்.

பலரும் தங்களை டுவிட்டர் கணக்கில் சேர்த்துக் கொண்டு பேஸ்புக்கில் இருந்து வெளியேறுமாறு தங்களது நண்பர்களுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தங்களது பதிவில், ”பேஸ்புக்கில் தனி நபரின் விவரங்கள் திருடப்படுகின்றன. நம்பிக்கையிலாத்தன்மை உருவாகிறது. விளம்பரங்கள் மூலம் ஒருவரை அவரது பேஸ்புக் வழியாக அணுகலாம் என்பது ஏமாற்று வேலை இல்லையா? தனிப்பட்ட நபரின் ரகசியங்கள் திருடப்படுகின்றன. இதற்கு ஒரே வழி தங்களது பேஸ்புக் பதிவிற்கு சென்று பழைய பதிவுகள் அனைத்தையும் பரிசோதிக்க வேண்டும். தேவையில்லாத போஸ்ட்களை நீக்க வேண்டும். இப்படியெல்லாம் செய்வது எனக்கு கடினம், முடியாது என்று கருதும்பட்சத்தில் பேஸ்புக் அக்கவுண்டில் இருந்து வெளியேறிவிடலாம். நீங்கள் என்றாவது தெரியாமல் ஏதாவது ஆப் இணைத்துக் கொண்டு இருந்தால், டெலிட் செய்து விடவும்” போன்ற தகவல்களை பதிவிட்டுள்ளனர்.

பேஸ்புக்கில் நடந்த தவறுகளுக்கு பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க் மன்னிப்பும் கோரியுள்ளார். சிஎன்என் – தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ”ஒரு கோடிக்கும் அதிகமானவர்களின் டேட்டாக்கள் திருடப்பட்டுள்ளன. அதற்கு மன்னிப்பு கோருகிறேன். ஆயிரக்கணக்கான ஆப்களை சோதித்துப் பார்க்க உள்ளோம்.

”கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த அமெரிக்கத் தேர்தலுக்குப் பின்னர் போலிச் செய்திகள் பரவுவதைத் தடுக்க பெரிய அளவில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள 10,000 ஊழியர்கள் இருந்த இடத்தில் 2017ல், 20,000 ஊழியர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

பேஸ்புக் நிறுவனமே இந்தத் தகவல்களைக் கொடுத்துள்ளது என்பதுதான் தற்போது பலரையும் சிந்திக்க வைத்துள்ளது. உலகம் முழுவதும் சுமார் 220 கோடி பேர் இதில் அக்கவுண்ட் வைத்துள்ளனர்.

அமெரிக்காவில் கடந்த 2016ல் தேர்தல் நடக்கும்போதும், நடந்த பின்னரும் சுமார் 29 மில்லியன் அமெரிக்கர்களுக்கு ரஷ்யாவில் இருந்து பேஸ்புக் வழியாக போலி செய்திகள் அனுப்பப்பட்டு இருப்பதாக பேஸ்புக் சந்தேகித்தது. அப்போது இருந்தே பேஸ்புக் தளம் ஒரு நம்பகமற்ற தளமாக இருந்து வருகிறது.

You might also like More from author