எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செல்லாது-டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

kejriwal_

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லாது என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

இதனை எதிர்த்து 20 எம்.எல்.ஏ.க்களும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கின் வாதங்கள் கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது, 20 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், தகுதிநீக்கம் தொடர்பாக தேர்தல் ஆணையம் அளித்த பரிந்துரைகளை ரத்து செய்து உத்தரவிட்டது.

மேலும், எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பான புகார் குறித்து மீண்டும் விசாரிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

You might also like More from author