முதல்முறையாக சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்ட தினகரன்!

dinakaran-participated-first-session-the-tn-legislative-assembly

தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில் தினகரன் பங்கேற்றார். அவர் முதல்முறையாக சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.அவர் சுயேச்சை வேட்பாளர் என்பதால் பின்பக்கம் இருக்கை கொடுக்கப்பட்டது. அவை நிகழ்வுகளை அவர் கண்காணித்து வந்தார்.

ஆளுநர் பேசுவதை கவனமாக அவர் கேட்டுக் கொண்டு இருந்தார். மேலும் உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்ட புத்தகத்தை அவர் படித்துக் கொண்டு இருந்தார்.
முதல் தடவை

சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரனுக்கும் இதுதான் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் ஆகும். ஆர்.கே நகர் தேர்தலில் 89,013 வாக்குகள் பெற்று அபாரமாக வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே எம்பியாக இருந்தாலும் இப்போது முதல்தடவை எம்.எல்.ஏவாக ஆகியுள்ளார்.

எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த போதும் தினகரன் வெளிநடப்பு செய்யாமல் அவை நிகழ்வுகளை கவனித்து வந்தார்.

முதல்முறை என்பதால் மிகவும் அமைதியாக காணப்பட்டார். மேலும் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சட்டசபை நிகழ்வுகளை குறித்த புத்தகத்தை அவர் படித்துக் கொண்டு இருந்தார்.

சட்டசபையில் தினகரனுக்கு 148ம் எண் இருக்கை ஒதுக்கப்பட்டு இருக்கிறது. 18 எம்.எல் .ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதால் அந்த இருக்கைகள் காலியாக இருந்தது. இந்த 18 பேரும் தினகரன் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

You might also like More from author