தி.மு.க. உயர்நிலை குழு கூட்டம் 29-ந்தேதி கூடுகிறது!

DMK-higher-executive-committee-meeting-on-29th

தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் வருகிற 29-ந்தேதி கூடுகிறது. தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.

கூட்டம் மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் தொடங்குகிறது. உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள கேட்டுக் கொள்கிறேன்.

ஆர்.கே. நகரில் தி.மு.க.வுக்கு ஏற்பட்ட படுதோல்வி அந்த கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. எனவே தோல்விக்கான காரணங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆராயப்படும் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.

You might also like More from author