அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்துக்கு முரணாக இந்தியா கருத்து !

-jerusalem-indias-position-

ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருப்பதற்கு முரணாக இந்தியா பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டரம்ப் புதன்கிழமை வெள்ளை மாளிகையில் ஆற்றிய உரையில் இஸ்ரேல் நாட்டின் தலைநகரமாக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக அறிவித்தார். மேலும், ஜெருசலேமிற்கு அதிகாரப்பூர்வமாக இந்த அங்கீகாரத்தை வழங்க இதுவே சரியான நேரம் என்றும் நிதர்சனமான உண்மைக்கு அளிக்கப்பட்ட அங்கீகாரமே இது என்றும் ட்ரம்ப் தனது நிலைப்பாட்டை விளக்கியுள்ளார்.

இத்துடன், டெல் அவிவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தை இஸ்ரேலுக்கு மாற்றவும் ட்ர்ம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார். “அமெரிக்க அதிபர்களாக இருந்த பலர் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அறிவிப்பதாக உறுதி கூறியுள்ளனர். ஆனால், ட்ரம்ப் அதற்கான நடவடிக்கையை எடுத்திருக்கிறார். இதனால், இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே அமைதிப் பேச்சு பாதிக்கப்படாது என்றே டரம்ப் கருதுகிறார்.” என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார், “பாலஸ்தீனம் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு சுதந்திரமானது மற்றும் தொடர்ச்சியானது. இது சொந்தமான பார்வையாலும் ஈடுபாட்டாலும் ஆனது. மூன்றாம் நபரின் தலையீட்டால் நிர்ணயிக்கப்படுவது அல்ல.” என்று கூறியுள்ளார்.

You might also like More from author