முதல் முறையாக ஒட்டகத்திற்கு தனி மருத்துவமனை!

dubai-opens-worlds-first-camel-hospital

துபாயில் முதல் முறையாக ஒட்டகத்திற்கு என தனி மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. 64 கோடி ரூபாய் செலவில் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அம்மருத்துவமனை இயக்குநர் பேசுகையில், ‘குதிரைகளுக்கு தனி மருத்துவமனை உள்ளது. ஆனால் ஒட்டகத்திற்கு அமைக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். ஒட்டகத்திற்கு உணவு கொடுப்பது மட்டும் போதாது. அதற்கு தேவையான மருத்துவ உதவிகளும் செய்ய வேண்டும்.

அடுத்த ஆண்டிற்குள் அறுவை சிகிச்சை அறை, எக்ஸ்-ரே அறை, எம்.ஆர்.ஐ. மற்றும் சி.ஏ.டி. ஸ்கேன் போன்ற வசதிகள் விரைவில் செய்யப்படும்’ என கூறினார்.

மருத்துவமனை வளாகத்தில் ஒட்டகம் தங்குவதற்கு என முகாம் அமைக்கப்பட்டுள்ளது. ஒட்டகத்திற்கு சிகிச்சை செய்ய பிரிட்டன் மற்றும் மெக்சிகோவிலிருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

You might also like More from author