நாடு முழுவதும் 3,119 ரயில்கள் தாமதமாக இயக்கம்!

due-to-heavy-fog-3000-trains-are-late-in-northern-india

வடமாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் ஏற்பட்ட பனிமூட்டம் காரணமாக, போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

பனிமூட்டம் காரணமாக, 3000 ரயில்கள் காலதாமதமாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், நாடு முழுவதும் நிலவும் கடும் பனிமூட்டத்தால் ரயில்சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

கடந்த நவம்பர் 1 முதல் டிசம்பர் 21 வரையிலான காலகட்டத்தில், சுமார் 3,119 ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.மேலும் வடமாநிலங்களில் மெயில் மற்றும் விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

இதுகுறித்து விரிவான தகவல்களை அறிந்து கொள்ள, ரயில் டிரைவர்களுக்கு ஜிபிஎஸ் கருவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார்.

You might also like More from author