மின்சார ரெயில் தடம் புரண்டு விபத்து!

சென்னை செண்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று காலை பட்டாபிராம் நோக்கி சென்று கொண்டிருந்த மின்சார ரெயில் ஆவடி ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது, ரெயிலின் இரண்டு பெட்டிகள் திடீரென தடம்புரண்டன. இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் பாதிப்பு இல்லை.

விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த அதிகாரிகள், ரெயிலை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, தண்டவாளத்தை சீர் செய்யும் பணி நடந்து வருகிறது.

You might also like More from author