ரத்த தானம் செய்யும் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை!

employees-can-now-get-paid-leave-for-blood-donation

ரத்த தானம் செய்யும் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

ரத்ததானம் செய்யும் மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுப்பு அளிக்கப்படுவது வழக்கத்தில் உள்ளது. ஆனால், ரத்தத்தின் உட்பிரிவுகளை தானமாக வழங்குபவர்களுக்கு விடுப்பு அளிக்கப்படுவது இல்லை.

ரத்த தானம் அல்லது சிகப்பணுக்கள், பிளாஸ்மா, ரத்தவட்டுக்கள் போன்றவை தானமாக வழங்குபவர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

உரிமம் பெற்ற ரத்த வங்கிகளில் வேலைநாட்களில் ரத்ததானம் செய்திருந்தால் இந்த விடுமுறை பொருந்தும். ஓர் ஆண்டிற்கு 4 முறை இந்த சிறப்பு சாதாரண விடுப்பை எடுக்கலாம்.

You might also like More from author