அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தக போர்? பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி!

fall in stock market

அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தக போர் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட அச்சம் காரணமாக சர்வதேச பங்குச்சந்தைகள் கடும் நெருக்கடி நிலையில் சிக்கி உள்ளன.

இதனால் காரணமாக இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி யடைந்தன, நிப்டி 10,000 புள்ளிகளுக்கு கீழ் சரிந்தது.

வார வர்த்தகத்தின் இறுதி நாளான இன்றும் பங்கு வர்த்தகம் கடும் இறக்கத்துடன் நிறைவடைந்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) 409.73 புள்ளிகள் சரிந்து 32,596.54 புள்ளிகளாக இருந்தது.

தேசிய பங்குச் சந்தை (நிஃப்டி) 116.70 புள்ளிகள் குறைந்து 9,998.05 புள்ளிகளாக இருந்தது.

You might also like More from author