கனரா வங்கியில் தீ விபத்து:ரூ. 22 கோடி நகை தப்பியது!

Fire-accident-at-Canara-Bank-near-Madurai-

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ளது பேரையூர். இங்குள்ள பஸ் நிலையம் முன்பு கனரா வங்கி செயல்பட்டு வருகிறது.

நேற்று மாலை வங்கிக்குள் இருந்து கரும்புகை வெளியானது. இதனை கவனித்த பொதுமக்கள் பேரையூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். அவர்கள் வங்கியின் கண்ணாடி ஜன்னல்களை உடைத்து தீயை அணைத்தனர். 1 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது.

தீ அணைக்கப்பட்டதும், வங்கி ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, 10-க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள், தளவாடப் பொருட்கள், ஆவணங்கள் எரிந்து நாசமாகி இருந்தன.

அதே நேரத்தில் ரூ. 40 லட்சம் மற்றும் ரூ. 22 கோடி மதிப்பிலான நகைகள் தீ விபத்தில் இருந்து தப்பின.

மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. பேரையூர் போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like More from author