கால்நடை தீவன ஊழலின் 4வது வழக்கு;லாலு பிரசாத்க்கு 7 ஆண்டுகள் சிறை

Lalu-Prasad-Yadav

கால்நடை தீவன ஊழலின் 4வது வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு, 14 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 60 லட்ச ரூபாய் அபராதம் விதித்து கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பீஹாரில், 1980 மற்றும் 1990களில், கால்நடை தீவனம் வாங்கியதில், பல கோடி ரூபாய் ஊழல் நடந்தது. போலி பில்கள் கொடுத்து, அரசு கருவூலத்தில் இருந்து பணம் எடுத்து, ஊழல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக, ஐந்து வழக்குகளை, சி.பி.ஐ., பதிவு செய்தது. இந்த வழக்குகள், ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தன.

இந்த ஊழல் அனைத்தும், காங்கிரசின், ஜெகன்னாத் மிஸ்ரா மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின், லாலு, பீஹார் முதல்வர்களாக இருந்தபோது நடந்தவை.

இதுவரை மூன்று வழக்குகளில், தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மூன்றிலும், லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு, முதல் வழக்கில் 5 ஆண்டு,

2வது வழக்கில் 3.5 ஆண்டு,

3வது வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

நான்காவது ஊழல் வழக்கில், மார்ச் 19 அன்று லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என, சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஷிவ்பால் சிங் அறிவித்தார்.

லாலுவுடன், அவரது ஊழலுக்கு உடந்தையாக இருந்த, மேலும், 17 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். லாலு , மற்றவர்களுக்கான தண்டனை விவரத்தை நீதிபதி இன்று அறிவித்தார்.

இதன்படி, லாலுவுக்கு இந்திய குற்றவியல் சட்டம் மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் தலா 7 ஆண்டுகள் என மொத்தம் 14 ஆண்டு சிறை தண்டனையும், 60 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

You might also like More from author