கார் விபத்தில் உயிர் தப்பிய கவுதம் மேனன்!

Gautham-menon-alive-with-injury-in-an-accident

தமிழ் சினிமாவில் இளைஞர்களை கவரும்படியாக படங்களை இயக்கும் இயக்குநர்களுள் ஒருவரான கவுதம் மேனன் சென்ற கார் லாரி மீது மோதியதில் அவர், காயங்களுடன் உயிர் தப்பினார்.

மின்னலே படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் கவுதம் வாசுதேவ் மேனன். இவர் வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா, காக்க காக்க உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.
நேற்று இரவு மாமல்லபுரத்தில் இருந்து சென்னை நோக்கி கவுதம் வாசுதேவ் மேனன் காரில் வந்து கொண்டிருந்தார்.
செம்மஞ்சேரி அருகே வந்த போது அந்த வழியாக சென்ற டிப்பர் லாரி மீது கார் மோதியது. இதில் கவுதம் மேனன் கார் அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் அவர் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பினார். பின்னர் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்றார். இதுபற்றி கிண்டி போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

You might also like More from author