ஜெர்மனி அதிபர் பிராங்க்-வால்டர் ஸ்டைன்மையர் இந்தியா வந்தடைந்தார். 

German-President-Steinmeier-arrived-in-India.

ஜெர்மனி அதிபர் பிராங்க்-வால்டர் ஸ்டைன்மையர் ஐந்து நாள் அரசுமுறை பயணமாக இன்று இந்தியா வந்தடைந்தார்.

அவருடன் ஜெர்மனியின் சில முக்கிய தொழிலதிபர்களும் வந்துள்ளனர். இந்த வருகையின்போது அவர் சென்னை மற்றும் வாரனாசி நகரங்களுக்கும் செல்வார் என கூறப்படுகிறது.
ஜெர்மனியில் சமீபத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற நிலையில், ஜெர்மனி அதிபரின் இந்தியா வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஜெர்மனி அதிபர் வருகையின் போது புதுப்பிக்கத்தக்க ஆற்றல், திறன் வளர்ச்சி, ஸ்மார்ட் சிட்டி, நீர் மற்றும் கழிவு மேலாண்மை தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெர்மனி நாட்டின் அதிபராக பதவியேற்ற பின்னர் பிராங்க்-வால்டர் ஸ்டைன்மையர் முதல் முறையாக இந்தியாவுக்கு வந்துள்ளார்.

You might also like More from author