ஹாலிவுட்டின் 75 வது”கோல்டன் க்ளோப்” விருதுகள் அறிவிப்பு!

goldven-globe-awards-2018-winners-list

ஹாலிவுட்டின் சிறந்த திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களை அங்கீகரிக்கும் கோல்டன் க்ளோப் விருது வழங்கும் விழா லாஸ் ஏஜல்ஸ் நகரில் நடைபெற்றது.

அமெரிக்காவின் ஹாவுட் பத்திரிக்கை கூட்டமைப்பால் கோல்டன் க்ளோப் விருது நடத்தப்படுகிறது. ஹாலிவுட்டின் தலைசிறந்த திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்கு இந்த விருது வங்கப்படுகிறது.

75 வது கோல்டன் க்ளோப் விருது வழங்கும் விழா தி பிவர்லி ஹில்டன் என்ற அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விருது வழங்கும் விழாவை அமெரிக்க நடிகர் சேத் மெயர்ஸ் தொகுத்து வழங்கினார். ஹாலிவுட் திரையுலகத்தில் பெண்களுக்கு எதிராக நிலவும் பாலியல் வன்கொடுமைகளை கண்டிக்கும் வகையில் விழாவில் கலந்துகொண்ட அனைவரும் கருப்பு நிற ஆடைகளை அணிந்திருந்தனர்.

விருதுகள் பட்டியல்
சிறந்த திரைப்படம் டிராமா: Three Billboards Outside Ebbing, Missouri
சிறந்த இயக்குநர்: குல்லரிமொ டெல் டொரொ, திரைப்படம் – The Shape of Water
சிறந்த கதாநாயகன்: கேரி ஓல்டுமேன், திரைப்படம் -Darkest Hour
சிறந்த கதாநாயகி: பிரான்சஸ் மெக்டோர்மண்ட் , திரைப்படம் – Three Billboards Outside Ebbing, Missouri
சிறந்த நகைச்சுவை திரைப்படம் (Musical or Comedy) : Lady Bird
சிறந்த நகைச்சுவை நடிகர் (Musical or Comedy): ஜேம்ஸ் பிரான்கோ, திரைப்படம் – The Disaster Artist
சிறந்த நகைச்சுவை நடிகை ( Musical or Comedy): சாவ்ரைஸ் ரோனன், திரைப்படம்- Lady Bird
சிறந்த துணை நடிகர்: சாம் ராக்வெல், திரைப்படம் -Three Billboards Outside Ebbing, Missouri
சிறந்த துணை நடிகை: அலக்சாண்ட்ரே டெல்பிலாட், திரைப்படம் -The Shape of Water
சிறந்த பாடல்: This is Me, திரைப்படம்- The Greatest Showman
சிறந்த திரைக்கதை: மார்டின் , திரைப்படம் – Three Billboards Outside Ebbing, Missouri’
சிறந்த பிறமொழி திரைப்படம் : In the Fade

You might also like More from author