முதல் முறையாக இந்தியாவில் முதலீடு செய்த கூகிள்..!

startup-dunzo

வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியாவில் ஸ்மார்ட்சிட்டிகளை உருவாக்கத் திட்டமிடப்பட்டு வரும் நிலையில், ஹைப்பர்லோக்கல் சேவைகளும் நாளுக்குநாள் இந்தியாவில் வளர்ந்து வருகிறது. மேற்கத்திய நாடுகளில் இத்தகைய சேவைகள் பிரபலமாக இருக்கும் பட்சத்தில் இந்தியாவில் இதேபோன்ற சேவையை அளித்து வருகிறது டன்சோ.

இந்த நிறுவனத்தின் பெயர் பெரிய அளவில் பிரபலம் அடையவில்லை என்றாலும், வர்த்தகச் சந்தையில் இன்றைய தலைப்பு செய்தியே டன்சோ தான்.

இந்தியாவில் இதுவரை ஏந்தொரு ஸ்டார்ட்அப் நிறுவனத்திலும் முதலீடு செய்யாமல் இருந்த கூகிள் நிறுவனம் முதல் முறையாக டன்சோ நிறுவனத்தின் மீது ஆர்வம் கொண்டு சுமார் 12 மில்லியன் டாலர் வரையிலான முதலீட்டைச் செய்துள்ளது.

இந்த முதலீட்டுக்கு டன்சோ நிறுவனத்தின் சிறிய அளவிலான பங்குகளைக் கூகிள் பெறுகிறது.

கூகிள் நிறுவனம் இந்தியாவில் Launchpad Accelerator என்ற திட்டத்தின் மூலம் பல நிறுவனங்களில் முதலீடும், இணைப்பும் உதவியும் செய்துள்ள நிலையில், நேரடியாக முதலீட்டில் இறங்கவில்லை.

ஆனால் பிப்ரவரி 2017 முதல் கூகிள் ஸ்டார்ட்அப் நிறுவனங்களைக் கையகப்படுத்தவும், முதலீடு செய்யவும் முடிவு செய்து அதற்கான பணிகளைச் செய்து வந்தது. இதன் வாயிலாகவே தற்போது கூகிள் நிறுவனம் நேரடி முதலீடாக டன்சோ நிறுவனத்தில் 12 மில்லியன் டாலர் அளவில் முதலீடு செய்துள்ளது.

2015ஆம் ஆண்டுப் பெங்களூரில் அன்கூர் அகர்வால், தால்வீர் சூரி, முகுந்த் ஜா மற்றும் கமபீர் பிஸ்வாஸ் ஆகியோரால் டன்சோ உருவாக்கப்பட்டுத் தற்போது பெங்களூரு வாடிக்கையாளர்களை மட்டுமே மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது

 இப்புதிய முதலீடு உடன் டன்சோ நிறுவனம் பெங்களூரை தொடர்ந்து இந்தியாவில் 5 அல்லது 6 முக்கிய நகரங்களில் தனது சேவையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

தற்போது ஒரு மாதத்திற்கு 1 லட்சம் பரிமாற்றங்கள் செய்து வரும் நிலையில், விரிவாக்கத்தின் மூலம் 2018ஆம் ஆண்டுக்குள் ஒரு நாளுக்கு 1 லட்சம் பிரிமாற்றங்கள் வரையில் நிகழ்த்த இலக்கை நிர்ணயம் செய்துள்ளது டன்சோ நிறுவனம்.

டன்சோ நிறுவனத்தில் ஏற்கனவே ப்ளூம் வென்சர்ஸ், அஸ்பாடா போன்ற முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்திருந்தாலும், கூகிள் நிறுவனம் நெக்ஸ்ட் பில்லியன் யூசர்ஸ் பிரிவின் கீழ் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதாகக் கூகிள் தெரிவித்துள்ளது.

You might also like More from author