அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டுத் தேர்வு டிச.7ல் தொடக்கம்.!

half-yearly-exam

தமிழகத்தில் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் இந்த ஆண்டுக்கான அரையாண்டுத் தேர்வு வரும் வியாழக்கிழமை(டிச.7) தொடங்குகிறது.

10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, வரும் 7-ம் தேதி அரையாண்டுத் தேர்வுகள் தொடங்கி 23-ம் தேதியுடன் முடிகிறது. இதில் பத்தாம் வகுப்புக்கான தேர்வுகள் 11-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி முடிகிறது.

மேற்கண்ட மூன்று வகுப்புகளுக்கு மட்டும் பொது வினாத்தாள் மூலமாக அனைத்து பள்ளிகளிலும் தேர்வுகள் நடக்கும். இதனையொட்டி, அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே கேள்வித்தாள் அனுப்பும் பணியும் துவங்குகிறது.

1ஆம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை கம்ப்யூட்டர் கல்வி கொண்டு வரப்பட்டு அதற்கான பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டும் உள்ளது. ஆனால், வகுப்புகளுக்கு கம்ப்யூட்டர்கள் வழங்கப்படாததால் இந்த பாடங்கள் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது.

You might also like More from author