சென்னை கடும் பனிப்பொழிவு விமான சேவை பாதிப்பு!

Heavy-snowfall-Chennai-airport-service-affected

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு இருந்ததால், சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிப்புள்ளாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இரவில் கடும் பனிப்பொழிவு இருந்து வருகிறது.
குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் அதிக அளவில் பனிப்பொழிவு இருந்து வருகிறது. எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்குத் தெரியாத வகையில் புகை மண்டலாக காட்சியளித்தது.
இந்நிலையில் இன்று காலை வெளிநாட்டு விமானங்கள் கடும் பனிப்பொழிவால் விமான நிலைய ஓடுதளத்தில் தரையிறங்க முடியாமல் திணறியது. இதனால் அந்த விமானங்கள் பெங்களூருக்கு திரும்பிச் சென்றன.
உள்நாட்டு விமானங்கள் சுமார் 20 நிமிடங்கள் காலதாமதமாக தரையிறங்கின. விமான சேவை பாதிப்பால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

You might also like More from author