ஆலோசனை வழங்கும் நபருக்கு ரூ.10 லட்சம் பரிசு-இந்திய ரயில்வே துறை!

indian-railways-

இந்திய ரயில்வே துறை மேம்படும் வகையில் சிறந்த ஆலோசனை வழங்குமாறு இந்திய ரயில்வே துறை பொதுமக்களிடம் ஆலோசனை கேட்டுள்ளது.சிறந்த ஆலோசனை வழங்கும்  நபருக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே துறையின் வருவாயை எந்த வகையில் உயர்த்துவது, தொழில் நுட்பத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், சேவைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பான திட்டங்கள் கேட்கப்பட்டுள்ளன. மேலும் அந்த திட்டங்களை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்றும் கோரப்பட்டுள்ளது.

ரயில்வே துறைக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்கும் நபர்களுக்கு பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி

முதல் பரிசாக ரூ.10 லட்சம்,

2ம் பரிசாக ரூ.5 லட்சம்,

3ம் பரிசாக ரூ.3 லட்சம்,

4வது பாிசாக ரூ.1 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்கள் ஆலோசனைகளை வருகிற மே மாதம் 19ம் தேதிக்கு முன்னராக https://innovate.mygov.in/jan-bhagidari/ என்ற இணையதள பக்கத்தில் பதிவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like More from author