ஐ லவ் யூ விராட் கோஹ்லி..உலக அழகி மனுஷி சில்லார்!

i-love-virat-kohli-says-manushi-chhillar

டெல்லியில் நடந்த தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் விராட் கோஹ்லி குறித்து உலக அழகி மனுஷி சில்லார் பேசி இருக்கிறார். மேலும் அந்த நிகழ்ச்சிலேயே அவர் வெளிப்படையாக ‘ஐ லவ் யூ விராட் கோஹ்லி’ என்றும் கூறியிருக்கிறார்.

மனுஷி சில்லாரின் வெளிப்படையான பேச்சும், கோஹ்லியின் பதிலும் அனைவரையும் கவர்ந்து இருக்கிறது.

விராட் கோஹ்லி மனுஷி சில்லாருக்கு, இந்தியாவிற்கு பெருமை தேடிக்கொடுத்ததற்காக விருது வழங்கினார்

இந்த விழாவில் கோஹ்லியிடம் மனுஷி முக்கியமான கேள்வி ஒன்றை கேட்டார். அதன்படி ”உங்களை தீவிரமாக பின்பற்றும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு நீங்க என்ன சொல்ல நினைக்கிறீர்கள்” என்று கேட்டார். அதற்கு விராட் கோஹ்லி ”நான் இதுவரை என்னை எதற்காகவும் மாற்றிக் கொண்டது இல்லை. நான் யாராகவும் மாற விரும்பியதே இல்லை. எல்லோருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது. அதை பின்தொடர வேண்டும்” என்று கூறினார்.

இதையடுத்து மனுஷ் விராட் கோஹ்லி குறித்து பேசினார். அதில் “ஐ லவ் யூ விராட் கோஹ்லி. நீங்கள்தான் எனக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு. உங்கள் கடினமான உழைப்பு என்னை அசரவைக்கிறது. நீங்கள் தான் எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர்” என்று வெளிப்படையாக கூறினார். மனுஷியின் இந்த வெளிப்படையான பேச்சு மிகவும் வைரல் ஆகி உள்ளது.

You might also like More from author