ஆப்கானிஸ்தான் ராணுவ வீராங்கனைக்களுக்கு சென்னையில் பயிற்சி!

afghan-women-military

முதல் முறையாக ஆப்கானிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த வீராங்கனைகளுக்கு இந்திய ராணுவம் சென்னையில் உள்ள முகாமில் பயிற்சி அளித்து வருகிறது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீண்டு வர 2 பில்லியன் டாலரை உதவித்தொகையாக கொடுத்தது. ஆப்கான் விமானப்படைக்கு 4 போர் ஹெலிகாப்டரை இந்தியா வழங்கியது. மேலும் கடந்த அக்டோபர் மாதம் ஆப்கான் பிரதமர் அஷ்ரஃப் கானி இந்தியா வந்த போது அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கும் என உறுதியளிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆப்கன் ராணுவத்தைச் சேர்ந்த பெண் அதிகாரிகளுக்கு முதல் முறையாக இந்திய ராணுவம் பயிற்சியளிக்கிறது. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆப்கான் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது. ஆனால் பெண் வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிப்பது இதுவே முதல் முறையாகும்.

ராணுவத்திலிருந்து 17 பேர், விமானப்படையிலிருந்து 3 பேர், சில பேர் சிறப்பு படையிலிருந்தும் மற்றும் ஆப்கான் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள அனைத்து துறைகளிலிருந்தும் பல வீராங்கனைகள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பயிற்சியின் முக்கிய நோக்கம் வீரர்களுக்கு, தகவல் தொடர்பு, தலைமை பொறுப்பு, வெற்றி கொள்ள கையாளப்படும் வகை முறைகள் போன்றவை குறித்து பயிற்சி அளிப்பது என ஆப்கானிஸ்தானுக்கான இந்திய தூதர் மன்பீரித் வோக்ரா தெரிவித்தார்.

You might also like More from author