தினகரனுக்கு “பிரெஷர்” குக்கர்..தேர்தல் ஆணையம்!

tv-dhinakaran-gets-cooker-symbol

ஆர்.கே.நகர் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் தினகரனுக்கு பிரெஷர் குக்கர் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வருகின்ற 21 தேதி நடைபெற உள்ளது. இதில் 100க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

முறையாக வேட்பு மனுவை பூர்த்தி செய்யவில்லை என்று தீபாவின் வேட்மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அவரை தொடர்ந்து நடிகர் விஷாலின் வேட்பு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. தேர்தல் ஆணையரிடம் முறையிட்டும் விஷால் தரப்புக்கு தோல்வியே மிஞ்சியது.

டிவி தினகரனுக்கு தொப்பி சின்னம் வழங்க வாய்ப்பில்லை என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கட்சிகள் தொப்பி சின்னத்தை கேட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நமது கொங்கு முன்னேற்றக்கழகம், எழுச்சி தமிழர்கள் முன்னேற்றக் கழகம், தேசிய மக்கள் சக்தி போன்ற மூன்று கட்சிகள் தொப்பி சின்னத்தை கேட்டுள்ளதால். இந்த கட்சிகளுக்கு குலுக்கல் முறையில் தொப்பி சின்னம் வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியது.

இந்நிலையில், ஆர்.கே.நகர் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் தினகரனுக்கு பிரெஷர் குக்கர் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

You might also like More from author