இன்டர்நெட் வேகம்.,உலக அளவில் 67வது இடத்தில் பின்தங்கிய இந்தியா

india-ranks-67th-in-fixed-broadband-speed-globally-at-20mbps

உலக அளவில் இன்டர்நெட் வேகம் அதிகம் கொண்ட நாடுகளின் தரவரிசைப் பட்டியலை ஓக்லா நிறுவனம் வெளியிட்டுள்ளது. பிராட்பேண்ட் இன்டர்நெட் மற்றும் மொபைல் இன்டர்நெட் என இரு பிரிவுகளில் இந்தப் பட்டியல் உள்ளது.

இதில், பிராட்பேண்ட் வேகத்தின் அடிப்படையில் இந்தியா 67வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவில் சராசரி பிராட்பேண்ட் இன்டர்நெட் வேகம் 20.72 Mbps ஆகும்.

மொபைல் இன்டர்நெட் வேகத்தின் அடிப்படையில் இந்தியா இன்னும் பின்தங்கியுள்ளது. சராசரியாக 9.01 Mbps வேகத்தில் மொபைல் இன்டர்நெட் சேவை வழங்கும் இந்தியா 109வது இடத்தில் இருக்கிறது.

ஆனால், மொபைல் இன்டர்நெட் வேகம் கடந்த ஆண்டைவிட சற்று உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு மொபைல் இன்டர்நெட் வேகம் 8.80 Mbps ஆக இருந்தது. இதே போல மொபைல் இன்டர்நெட் அப்லோட் வேகத்திலும் இந்தியா 3.66 Mbps என்ற நிலையிலேயே உள்ளது.

You might also like More from author