அதிவேக ‘பிரமோஸ் சூப்பர்சானிக்’ ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

brahmos-missile-

இந்தியாவின் அதிவேக ‘பிரமோஸ் சூப்பர்சானிக்’ ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.இந்த ஏவுகணை 200 கிலோ வெடிப் பொருளுடன் சுமார் 290 கிலோ மீட்டர் தூரம் வரை பறந்து சென்று தாக்கும் ஆற்றல் கொண்டது.

இதற்கு முன் பல முறை பிரமோஸ் ஏவுகணை சோதனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று காலை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பொக்ரான் பகுதியில் பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனைச் செய்யப்பட்டது. இந்த வெற்றிக்கு பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார்.

You might also like More from author