வீழ்ந்து எழுந்த இந்திய பங்குச்சந்தை!

indian-stock-market-to-volatile

 குஜராத் மற்றும் ஹமாச்சல் பிரதேசம் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையால் இந்திய பங்குச்சந்தைகள், வர்த்தக வாரத்தின் முதல்நாளில் கடுமையாக சரிந்தன. பின்னர் எழுச்சி கண்டன.

குஜராத் மற்றும் ஹமாச்சல் பிரதேசம் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. ஓட்டு எண்ணிக்கை துவங்கிய ஒரு மணிநேரத்தில் பா.ஜ., மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது. ஒரு கட்டத்தில் காங்கிரஸ் பா.ஜ., விட முன்னிலை பெற்றது.

இதன் காரணமாக இன்றைய வர்த்தகம் துவங்கும் போது இந்திய பங்குச்சந்தைகள் கடுமையாக சரிந்தன.

வர்த்தகநேர துவக்கத்தில் (9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 867.34 புள்ளிகள் சரிந்து 32,595.63-ஆகவும்,

தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 258.45 புள்ளிகள் சரிந்து 10,074.80-ஆக வர்த்தகமாகின.

You might also like More from author