பூட்டிய வீடுகளை கண்காணிக்கும் விதமாக பொதுமக்களுக்கு புதிய செயலி அறிமுகம்

Introduce a new app for the public to monitor locked houses

மதுரை நகரில் கொள்ளை சம்பவங்களை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ன்றன. பெரும்பாலும்  பூட்டிய  வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுகின்றன.


இன்று  மதுரை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்கள்  சந்திப்பில் பேசிய காவல் துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பூட்டிய வீடுகளில் சிசிடிவி பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. ​​அதனை கண்காணிப்பதற்காக செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இச்ச்செயலியை வீட்டின் உரிமையாளர்களின் அலைபேசியில் நிறுவி அதில் யார்யார் வருகின்றனர் என்பதை அறியலாம். இந்த வசதி மூலம் பொதுமக்களுக்கு மிக பாதுகாப்பாகவும் கொள்ளை சம்பவங்களை தடுக்க உதவும். இதில் வீடியோ பதிவு குறைந்தது இருபது நாட்களுக்கும் மிகாமல் இருக்கும் எனவும் இதில் நேர்த்தியாக கண்காணிக்கலாம் எனவும் தெரிவித்தார்.

இந்த வசதியை மதுரை பாராளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.அப்போது அவர் பேசுகையில் மதுரை  மற்ற மாவட்டங்களுக்கு ஒரு முன் உதாரணமாக செயல்படுகிறது. கொள்ளை சம்பவங்களை  தடுக்க மதுரை காவல் துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

You might also like More from author