Home தொழில்நுட்பம் இஸ்ரோவின் செயற்கைக் கோளான GSAT-6A விண்ணில் பாய தயார்

இஸ்ரோவின் செயற்கைக் கோளான GSAT-6A விண்ணில் பாய தயார்

62
isro-
isro-

இஸ்ரோவின் புதிய தொலைத்தொடர்பு செயற்கைக் கோளான GSAT-6A ஜியோசைன்ரோனஸ் செயற்கைக் கோள். 2140 கிலோ எடை கொண்ட இது உயர் சக்தி கொண்ட எஸ்-பேண்டு (S-Band) செயற்கைக் கோள் ஆகும்.

இந்த செயற்கைக் கோள் வரும் மார்ச் 29ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட உள்ளது. சரியாக மாலை 4.56 மணிக்கு இச்செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்படும். அடுத்த பத்து ஆண்டுகள் விண்ணில் வலம் வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் இஸ்ரோ அனுப்பிய GSAT-6 என்ற தொலைத்தொடர்பு செயற்கைக் கோளை விட GSAT-6A எடை சற்று எடை அதிகமானது.

GSAT-6 செயற்கைக் கோள் 2132 கிலோ எடை கொண்டது. 2015ஆம் ஆண்டு இது விண்ணில் ஏவப்பட்டது. இதுவும் பத்து ஆண்டுகள் வலம் வரும் வகையில் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.