விண்ணிலிருந்து நிலஅமைப்புகளை படம் எடுத்து அனுப்பும் காகித கேமரா!

விண்ணிலிருந்து நிலஅமைப்புகளை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் அனுப்பப்பட்ட காகித கேமரா, தற்போது படங்களை அனுப்பி வருகிறது.

இந்தியாவிலேயே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்தியன் நானோ சாட்டிலைட்-1சி (INS-1C) என்ற செயற்கைகோள் கேமரா, வெற்றிகரமாக அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

பேப்பரைப் போல் மடங்கக்கூடிய இந்தக் கேமரா, உலோக கண்ணாடிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் இயக்கத்தில் உள்ள இந்த கேமரா தொடர்ந்து விண்ணிலிருந்து படங்களை அனுப்பி வருகிறது.

இந்த கேமரா மூலம் சுமார் 505கிமீ உயரத்திலிருந்து 29 மைல் சுற்றளவிலுள்ள நிலப்பரப்புகளின் படங்கள் எளிதாக எடுக்கப்படுகின்றன. இந்த கேமரா அனுப்பும் படங்களும் தகவல்களும் வானிலை ஆய்வுகளை  நடத்த மிகவும் பயனுள்ளதாக உள்ளதாக இஸ்ரோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like More from author