தனக்கு தானே ‘காலமானார்’ விளம்பரம் கொடுத்து முதியவர்!

advertisement-died

கேரளாவில், தனிமையில் தவித்து வந்த முதியவர் ஒருவர், தனக்கு தானே பத்திரிகையில், ‘காலமானார்’ விளம்பரம் கொடுத்து விட்டு காணாமல் போய் விட்டார். போலீசார் அவரை தேடி கண்டுபிடித்து மீட்டனர்.

கேரள மாநிலம், கன்னூர் மாவட்டம், தாலிபரம்பா என்ற இடத்தை சேர்ந்தவர் ஜோசப் மெலுகுனல்,75. தனியாக தங்கி வந்த இவர் கடந்த நவ., 21ம் தேதி கதுதுருத்தி என்ற இடத்தில் நடந்த உறவினர் இல்ல திருமண விழாவில் பங்கேற்றார். அதன் பிறகு, நவ., 29ம் தேதி அவரது ‘காலமானார்’ விளம்பரம் பத்திரிகைகளில் வெளியானது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரது வீட்டுக்கு சென்றனர். ஆனால், அங்கு யாரும் இல்லை. எனவே, போலீசில் புகார் கொடுத்தனர். விசாரணையில் இறங்கிய போலீசார் கோட்டயத்தில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி இருந்த ஜோசப்பை கண்டுபிடித்தனர். உறவினர்கள் நடந்த விஷயம் குறித்து கேட்டது அதிர்ச்சி அடைந்தனர்.

 

போலீசாரிடம் ஜோசப் கூறுகையில், ” தனிமையில் வசித்து வந்த எனது உடல் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வந்தது. மற்றவர்களுக்கு பாரமாக இருக்க விரும்பாததால், பத்திரிகையில் எனது, ‘காலமானார்’ விளம்பரத்தை வெளியிட வைத்தேன். அதன் பிறகு எனது வாழ்க்கையை முடித்து கொள்ள முடிவு செய்தேன். நவ., 29ம் தேதிக்கு பிறகு கர்நாடகா சென்றேன். அங்கு சில நாட்கள் தங்கிய பிறகு கோட்டயம் வந்தேன். தனித்து வாழ்வது சிரமமாக உள்ளது,” என்றார். அவரை பத்திரமாக உறவினர்களுடன் போலீசார் அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தை மலையாள மனோரமா நாளிதழ் செய்தியாக வெளியிட்டுள்ளது.

You might also like More from author