ரஜினியின் படம் பற்றிய வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா அதிரடி விளக்கம்

Kaala-rumor-Lyca-Description

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தை பற்றி வெளியாகி இருக்கும் வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

கடைசியாக ஏப்ரல் 27ம் தேதி ‘காலா’ ரிலீஸ் என்று தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதையடுத்து பட ரிலீஸ் வேலை நடந்து வருகிறது. பட டீசரும் வெளியாகி சாதனை படைத்திருக்கிறது.
இந்நிலையில், டிஜிட்டல் பிரச்சனை காரணமாக கடந்த 1ம் தேதி முதல் புதிய படங்கள் ரிலீஸ் செய்வதை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நிறுத்தி வைத்துள்ளது. மேலும் 16ம் தேதி முதல் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளது.
அதுபோல், திரையரங்கு உரிமையாளர்களும் கேளிக்கை வரியை எதிர்த்து 16ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இதனால் மார்ச் மாதம் இறுதியில் ரிலீஸ் ஆக வேண்டிய படங்கள் முடங்கியிருக்கிறது. அடுத்த மாதம் வரை இந்த வேலை நிறுத்தம் தொடர்ந்தால் காலா பட ரிலீஸும் தள்ளிப்போகும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், லைகா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. “நாங்கள் யாரிடம் காலா பட ரிலீஸ் தேதி பற்றிய செய்தியை கூறவில்லை. அது பற்றி பரவும் செய்திகள் மற்றும் வதந்திகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல” என டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.

You might also like More from author