தனக்கென்று ஒரு இணையதளம் தொடங்கிய கீர்த்தி சுரேஷ்.

Keerthi-Suresh

தனி ஒரு நடிகையாக தனக்கென்று ஒரு இணையதளம் தொடங்கியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.
தமிழ் சினிமாவில், முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து. கீதாஞ்சலி என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

இப்படத்தைத் தொடர்ந்து தமிழில் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விக்ரம், விஷால் ஆகிய மாஸ் ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். பைரவா படத்தில் விஜய்யுடன் நடித்த கீர்த்தி சுரேஷ் தற்போது 2வது முறையாக தளபதி 62 என்ற படத்திலும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தனக்கென்று ஒரு புதிய இணயதளம் ஒன்றை தொடங்கியுள்ளார். இதில், அவரைப் பற்றிய படங்கள், புகைப்படங்கள்,கீர்த்தி சுரேஷ் இணையதளம் தகவல்கள், வீடியோஸ் போன்றவறை அடங்கிய அனைத்து தகவல்களும் இடம் பெற்றுள்ளன.

You might also like More from author