மதுரையில் 6 கோடி 80 லட்சம் செலவில் அம்மா அரங்கம்

amma arangam

மதுரை வக்பு வாரியக் கல்லூரியில் , புதிதாக கட்ட யுள்ள கட்டிடத்தின் இடத்தை தமிழ்நாடு தொழிலாளர் நலத் துறை மற்றும் வக்பு வாரியத் துறை அமைச்சர் நிலோபர் கபீல் , கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜீ, ராமநாதபுரம் பாராளமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா பார்வையிட்ட பின் , நிலோபர் கபீல் செய்தியாளர்களை சந்தித்தார் , சந்திப்பில்,


வக்பு வாரியத்தின் செலவில் 34,000 சதுர அடியில் , 1200 மாணவர்கள் அமரும் விதமாகவும்,600 மாணவர்கள் அமர்ந்து உணவு உண்ணும் உணவு கூடழும், 6 கோடி யே 80 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்ட இருக்கின்றது,

இக்கட்டிடம் இன்று தொடங்கி ஒரு வருடத்திற்க்குள் கட்டி முடிக்கப்படும், இக்கட்டிடத்திற்க்கு அம்மா அரங்கம் என பெயர் சூட்டயுள்ளோம், வக்பு வாரிய கல்லூரியில் 40 சதவிதம் தான் சிறுபான்மையர் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

60 சதவிதம் மற்ற மத மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது, அடுததாக ஹஸ்டல் கட்ட உள்ளோம், இக்கல்லூரிக்கு பேரரசிரியர்கள் தேவை படுகிறது, இவ்வாறு கூறினார்,

You might also like More from author