தமிழ்நாடு அளவிலான கைபந்து போட்டிகளை  அமைச்சர் செல்லூர் ராஜீ துவக்கி வைத்தார்

madurai sellur raju

மதுரை காமராசர் பல்கலைகழகம் சார்பில்  தமிழ்நாடு அளவிலான பல்கலைகழக ஆண்கள், பெண்களுக்கான கைபந்து போட்டிகளை  அமைச்சர் செல்லூர் ராஜீ  துவக்கி வைத்தார்

திருப்பரங்குன்றம்  அருகே உள்ள நாகமலை புதுக்கோட்டையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் தமிழ்நாடு பல்கலை கழகங்களுக்கிடையேயான ஆண்கள், பெண்களுக்கான் 2 நாள் கைபந்து போட்டியை அமைச்சர் செல்லூர் ராஜூ இரவு 8:00 மணிக்கு துவக்கி வைத்தார்.
பல்கலை கழக பதிவாளர் சின்னய்யா தலைமை தாங்கினார், சிறப்பு விருந்தினர்களாக  வெள்ளைச்சாமி கல்லூரி செயலாளர் பெரிஸ் மகேந்திரவேல் , தமிழக ஒலம்பிக் சங்க செயலாளர் சோலைராஜா , பல்கலைகழக உடற்பயிற்சி இயக்குநர் ஜெயவீர பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பல்கலை கழகங்களுக்கிடையே கைபந்து போட்டியில்  மதுரை காமராசர், அழகப்பா, அண்ணாமலை, கற்பகம், பாரதிதாசன், மனோன்மணியம் சுந்தரனார் உள்ளிட்ட 11 பல்கலை கழகங்களின் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதே  போல் 10 பல்கலை கழக மாணவிகள் கைபந்து போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
பெண்களுக்கான முதலாவது போட்டியில் திருவள்ளுவர் பல்கலை கழகமும், அண்ணா பல்கலை கழக அணிகளும் மோதினர்,
ஆண்களுக்கான போட்டியில் முதலாவதாக மதுரை காமராஜர் பல்கலைகழகமும், தமிழ்நாடு விளையாட்டு பல்கலை கழக மாணவர்கள் மோதினர்.

You might also like More from author