‘டிராபிக் ராமசாமி’உடன் இணைந்த விஜய் சேதுபதி!

vijay-sethupathi

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி வருகிறது. அவருடைய நிஜப் பெயரிலேயே படத்தின் தலைப்பு உள்ளது.

இந்தப் படத்தில், டிராபிக் ராமசாமி கேரக்டரில் எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கிறார். அவருடைய மனைவியாக ரோகிணி நடிக்கிறார்.

மேலும். விஜய் ஆண்டனி, இந்தப் படத்தில் நடிகராகவே நடிக்கிறார்.

தற்போது இந்தப் படத்தில் விஜய் சேதுபதியும் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் உதவியாளர் விக்கி என்பவர் இயக்கி வருகிறார்.

You might also like More from author