மம்மூத் யானையின் எலும்புக்கூடு ரூ.4 கோடிக்கு ஏலம்

mammoth-elephant-born-auction

ஃபிரான்ஸ் நாட்டில் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மம்மூத் என்ற யானையின் எலும்புக்கூடு, ரூ.4 கோடியே 13 லட்சத்துக்கு ஏலம் போன நிகழ்வு நடந்துள்ளது.

மம்மூத் எனப்படும் நீண்ட ரோமங்களுடனும், மிகப்பெரிய வளைந்த தந்தங்களுடனும் கம்பீரமான யானைகள் பனியுக காலத்தில் ஐரோப்பிய கண்டத்தில் வாழ்ந்தன.

30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அதிகமான அளவில் வாழ்ந்த இந்தவகை மம்மூத் யானைகள் மதனிர்களால் வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்டதாக ஒருதரப்பினர் கூறி வருகின்றனர்.

ஆனால், இதுகுறித்த டி.என்.ஏ. ஆராய்ச்சிகளின் முடிவுகள் மம்மூத் யானைகள் இனம் இறந்ததற்கு காரணம் காலநிலை மாறுதலே என்று கூறியுள்ளது.

மம்மூத் இன யானையின் முழு உடல் அமைப்புடன் கூடிய எலும்புக்கூடு பிரான்சின் லியான்நகரில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஏலம் விடப்பட்டது. பிரெஞ்ச் பொட்டார் புரூப்பிங் கம்பெனி, ரூ.4 கோடியே 13 லட்சத்துக்கு மம்மூத் யானையின் எலும்புக்கூட்டை ஏலத்துக்கு எடுத்துள்ளது.

எலும்புக்கூடு ஆக உள்ள இந்த மம்மூத் யானை உயிருடன் இருந்த போது அந்த யானை 1400 கிலோ எடையுடன் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

மண்ணில் புதைந்து கிடந்த இந்த எலும்புக்கூடு 10 ஆண்டுகளுக்கு முன்பு சைபீரியாவில் தோண்டி எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You might also like More from author