சச்சின் மகளுக்கு மிரட்டல்.,இளைஞன் கைது!

man-arrested-for-stalking-sachin-tendulkars-daughter-sara

மேற்கு வங்கத்தை சேர்ந்த ஒரு வாலிபர், முன்னாள் கிரிக்கெட் வீர்ர் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாராவை பின் தொடர்ந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

சாராவுக்கு 20 தடவைக்கும் மேலாக போன் செய்ததோடு, அவரை கடத்திவிடுவேன் என மிரட்டல் விடுத்ததாகவும், தன்னை காதலிக்குமாறும், திருமணம் செய்துகொள்ள வேண்டும் என கூறியதாக அந்த இளைஞன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விசாரணையில் அந்த இளைஞன் வேலையில்லாதவர் என்றும், கல்லூரி படிப்பை பாதியிலேயே கைவிட்டவர் என தெரியவந்துள்ளது.

சாராவின் போனுக்கு போன் செய்து மிரட்டல் விடுத்ததோடு, இழிவாக பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சச்சினின் வீட்டு லேண்ட் லைன் போன் நம்பர் எப்படி அந்த இளைஞனுக்கு கிடைத்தது என்று தெரியவில்லை என கூறப்பட்டுள்ளது.

சாரா சச்சின் அளித்த புகாரின் பெயரில் பாந்த்ரா போலீஸார் அந்த இளைஞனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like More from author