துப்பாக்கிச் சூடு உலக கோப்பை;இந்திய வீராங்கனை தங்கம் வென்றார்

manu-bhaker-wins-gold-in-issf-junior-world-cup-shooting

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் நடக்கிறது. இதில் பெண்களுக்கான 10 மீ., ‘ஏர் பிஸ்டல்’ பிரிவில் இந்திய வீராங்கனைகள் மனு பாகர், தேவன்ஷி ஆகியோர் பங்கேற்றனர்.

இருவருமே இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர். இறுதியிலும் கலக்கிய மனு பாகர் 235.9 புள்ளிகள் பெற்று தங்கத்தை தட்டிச்சென்றார்.

தாய்லாந்தின் கன்யாகோர்ன்னைக்க வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

வெண்கலப் பதக்கத்தை சீன வீராங்கனை லியு கைப்பற்றினார்.

வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை நெருங்கிய மற்றொரு இந்திய வீராங்கனை தேவன்ஷி துரதிர்ஷ்டவசமாக 4வது இடத்தையே பெற்றார்.

கடந்த மாதம் மெக்சிகோவில் நடைபெற்ற சீனியர் உலக கோப்பை தொடரிலும் 10 மீ., ‘ஏர் பிஸ்டல்’ பிரிவில் பங்கேற்ற மனு பாகர் இதேபோல கடைசி வாய்ப்பில் கலக்கி தங்கம் வென்றார்.

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இவர் அதே தொடரில் கலப்பு இரட்டையர் பிரிவிலும் தங்கப் பதக்கத்தை வென்று சாதித்தார்.

You might also like More from author