டிசம்பர் 10 மனித உரிமைகள் தினம்.,சென்னையில் மாரத்தான் ஓட்டம்!

human-rights day

அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் 1948 டிசம்பர் 10-ம் நாள் ஒன்றுக்கூடிய ஐக்கிய நாடுகளின் பொது அவையால்  ஏற்றுக் கொள்ளப்பட்டது. அந்த நாளைக் குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 10-ம் தேதி உலகம் முழுவதும் மனித உரிமை நாளாக கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், நாளை டிசம்பர் 10 என்பதால், மக்களுக்கு மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சென்னையில் இன்று மாரத்தான் ஓட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 1500 பேர் கலந்து கொண்டனர்.

மாரத்தான் போட்டியை என்.சி.சி. இயக்குநரக துணை தலைமை இயக்குனர் விஜேஷ் கே கார்க் தொடங்கி வைத்தார்.மேலும் மனித உரிமைகள் ஆணையத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

You might also like More from author