கரீபியன் தீவு 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.,சுனாமி எச்சரிக்கை!

massive-7-8-quake-jolts-caribbean-islands

கரீபியன் தீவுப் பகுதியில் இன்று காலை 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கரீபியன் தீவுப் பகுதியில் இன்று காலை 5.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜமைக்காவின் மேற்கில் 7 கி.மீட்டர் தொலைவிலான இடத்தில், 10 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் 7.8 ரிக்டர் அளவில் இருந்தது.

இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து பியூர்டோ ரிகோ மற்றும் அமெரிக்காவின் வெர்ஜின் தீவுப் பகுதியில் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் விடுத்துள்ளது. மேலும் நிலநடுக்கம் மையம் கொண்ட இடத்தில் இருந்து 1000 கி.மீட்டர் தொலைவிற்கு கடலோரப் பகுதியில் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மத்திய அமெரிக்கா மற்றும் மெக்சிகோவும் உள்ளடங்கும். இதுவரை எந்தவித உயிர்சேதம் ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.

You might also like More from author