மைல் கற்களில் இந்தி எழுத்துகள்..கருப்பு மைபூசி அழிப்பு!

மதுரை – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை NH – 49 என்று அழைக்கப்படுகிறது. இதனை நான்கு வழிச் சாலையாக மாற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த சாலை ராமநாதபுரம் நகருக்கு செல்லாது.

அதற்கு பதிலாக அச்சுந்தன்வயல் முதல் பட்டினம்காத்தான் வரை சுற்றுச்சாலையாக அமைக்கப்படுகிறது. இந்த சுற்றுச்சாலையில் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் மைல் கற்கள் வைக்கப்பட்டுள்ளன.

அந்த கற்களில் தமிழ், ஆங்கில மொழிகளில் குறிப்பிட்ட ஊர்களுக்கான தூரம் குறிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அந்த ஊர்களின் பெயர்கள் இந்தியில் எழுதப்பட்டு, தற்போது புதிய மைல் கற்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கு மதிமுக சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அக்கட்சியின் இளைஞரணி மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் மைல் கற்களில் எழுதப்பட்ட இந்தி எழுத்துகளை கறுப்பு மை கொண்டு அழித்தனர்.

மேலும் அதில் ‘தமிழ் மண்’ என்றும் எழுதியுள்ளனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் ராமநாதபுரம் காவல் துறையிடம் புகார் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

You might also like More from author