அமீர் கான் தான் பிடிக்கும்..உலக அழகி மனுஷி சில்லார் அதிரடி!

சீனாவில் நடைபெற்ற போட்டியில் உலக அழகியாக கிரீடம் சூட்டப்பட்ட அரியானா மாநிலத்தை சேர்ந்த மருத்துவ மாணவி மனுஷி சில்லார் மும்பை நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

சீனாவின் சான்யா நகரில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் பங்கேற்க நான் சென்றபோது என்னுடன் போட்டியிட்ட பிறநாடுகளை சேர்ந்த அழகிகள் என்னை பாலிவுட் சினிமா நடிகை என்று நினைத்திருந்தனர்.

எனது அபிமான நடிகை பிரியங்கா சோப்ரா. தற்போதுவரை பாலிவுட் உலகை பற்றி நான் ஏதும் சிந்திக்கவில்லை. ஆனால், அமீர் கானுடன் சேர்ந்து அவரது படத்தில் நாயகியாக நடிக்க ஆசைப்படுகிறேன். அவரது படங்களில் சமுதாயத்துக்கான ஒரு மெசேஜுடன் கதாநாயகியின் திறமையை வெளிப்படுத்தக்கூடிய கதாபாத்திரங்கள் இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like More from author