தி.மு.க.வில் தலைமை மாறுதல் தேவை:மு.க அழகிரி!

 முன்னாள் மத்திய மந்திரி மு.க அழகிரி தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது.,

கருணாநிதி தலைமையில் அனைத்து தேர்தல்களிலும் ஜெயித்தோம். ஸ்டாலின் செயல்தலைவராக இருக்கும் வரை தி.மு.க வெற்றி பெறப்போவது இல்லை. களப்பணி இல்லாமல் எந்த வெற்றியும் பெற முடியாது.

ஆர்.கே நகரில் டெபாசிட் போனதற்கு ஸ்டாலின் காரணம்.போதிய மேற்பார்வை இல்லாமல் இருக்கும் நிலையில், தி.மு.க.வின் உண்மையான தொண்டர்களை பணத்திற்காக விலை போனதாக கூறுவதா?.

வெற்றிப்பாதையில் செல்லவேண்டுமானால் தி.மு.க.வில் தலைமை மாறுதல் தேவை, அனைவரையும் ஒருங்கிணைத்து செல்லும் வகையில் தலைமை இருக்க வேண்டும்.

ஆர்.கே நகரில் பிரபல சின்னங்கள் களத்தில் இருந்த நிலையில், புதிய சின்னத்துடன் தினகரன் சுயேட்சையாக இறங்கி வெற்றி பெற்றுள்ளார். தி.மு.க மற்றும் அ.தி.மு.க மீதான வெறுப்பே அவரை வெற்றி பெறச்செய்துள்ளது.

தேர்தலில் வாக்களர்களுக்கு பணம் கொடுப்பது என்றாலே திருமங்கலம் பார்முலா என்று கூறுகின்றனர். திருமங்கலம் பார்முலா என்பது கட்சி தொண்டர்கள் கடுமையாக உழைத்ததுதான். பணம் மட்டும் தேர்தலில் வெற்றிபெற போதாது.

தேர்தலில் யார் ஜெயித்தாலும் பண நாயகம் வென்றது, ஜனநாயகம் தோற்றது என்று கூறுவது இயல்பானது. தி.மு.க வெற்றிபெற வேண்டுமானால் புதிதாக வருபவர்களுக்கு பதவி கொடுப்பதை நிறுத்த வேண்டும். துரோகம் இழைத்தவர்களை நீக்கிவிட்டு பழைய உண்மையான தொண்டர்களுக்கு பதவி அளிக்க வேண்டும்.  என்றரர்

You might also like More from author