“பென்னு” என்ற எரிகல்லை அணு விண்கலம் மூலம் நொறுக்க நாசா திட்டம்

nasa

சூரியனை சுற்றி வரும் மிகப்பெரிய பென்னு என்ற எரிகல்லை அணு விண்கலம் மூலம் விண்ணிலேயே அடித்து நொறுக்க நாசா மையம் திட்டமிட்டுள்ளது.

தற்போது பென்னு என்ற மிகப்பெரிய எரிகல் சூரியனை சுற்றி வருகிறது. அது 1600 அடி அகலம் கொண்டது. அது மணிக்கு 63 ஆயிரம் மைல் வேகத்தில் சூரியனை சுற்றி வருகிறது. அது தற்போது பூமியில் இருந்து 5 கோடியே 40 லட்சம் மைல் தொலைவில் உள்ளது. அது பூமியை தாக்கினால் கடும் பாதிப்பு ஏற்படும்.

எனவே கடந்த 1999-ம் ஆண்டு முதல் இதன் செயல்பாடு கண்காணிக்கப்பட்டு வருகிறது. பென்னு என்ற எரிகல்லை விண்ணிலேயே அடித்து உடைத்து நொறுக்க நாசா மையம் திட்டமிட்டுள்ளது.

அதற்காக மிகப்பெரிய அணு விண்கலம் தயாரிக்கப்பட உள்ளது. அதற்கு ‘கேமர்’ (சுத்தியல்) என பெயரிடப்பட்டுள்ளது. பென்னு எரிகல் மட்டுமின்றி மற்ற எரிகற்களை உடைத்து நொறுக்க இது பயன்படுத்தப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

You might also like More from author