153 மாவட்டங்கள் கடுமையான வறட்சி;இந்திய வானிலை மையம்

கோடை காலத்தின் துவக்கத்திலேயே நாட்டில் உள்ள 153 மாவட்டங்கள் கடுமையான வறட்சிக்கு உள்ளாகி உள்ளதாக இந்திய வானிலை மைய புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது.

2017 அக்டோபர் முதல் 2018 மார்ச் வரை 140 மாவட்டங்கள் மழை இல்லாததால் மிக கடுமையாக வறண்டுள்ளன. மற்ற 109 மாவட்டங்கள் பாதியளவும், 156 மாவட்டங்கள் சிறிதளவும் வறண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை நாடு முழுவதும் உள்ள 153 மாவட்டங்கள் கடுமையான வறட்சியை சந்தித்து வருகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் கோடையில் நாட்டின் பல பகுதிகள் தண்ணீர் பஞ்சத்தை எதிர்நோக்க வேண்டியாக இருந்தாலும், இந்த ஆண்டு மழைக்காலத்தின் போது பல பகுதிகளில் மழை இல்லை.

இதனால் கோடையில் அப்பகுதிகள் மிக அதிக அளவில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

You might also like More from author