புத்தாண்டு தினம்.,பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த சதி-உஷார் நிலை!

Alertness at airports

புத்தாண்டு தின கொண்டாட்டத்தின் போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

 நாடு முழுவதும் புத்தாண்டு தினம் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. அப்போது தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது.

கடந்த காலங்களில், பயங்கரவாதிகள், தேச விரோத சக்திகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். புத்தாண்டு தினத்தன்று பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளன.

2017 ல் ஐஎஸ் ஆதரவாளர்கள் பல நாடுகளில், பொது மக்கள், போலீஸ் அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த வருடம் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில், மக்கள் மீது வாகனங்களை ஏற்றியும், கூட்டங்களில், கண்மூடித்தனமாக சுடவும், தற்கொலைப்படை தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். இதனால் விமான நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த சுற்றிக்கை விமான நிலைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அமைப்புகள் மற்றும் அனைத்து மாநில போலீசாருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வரும் பயணிகள், உடைமைகள், வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனை செய்யப்படுகின்றன.

You might also like More from author