விமான நிலையங்களின் பெயர்கள் மாற்றம்-மத்திய அரசு

nine Airport names change

நாடு முழுவதும், ஒன்பது விமான நிலையங்களின் பெயர்களை மாற்ற, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

‘மதுரை விமான நிலையத்துக்கு, முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும்’ என, ராஜ்யசபாவில் நேற்று, பா.ஜ., – எம்.பி., சுப்பிரமணியன் சாமி வலியுறுத்தினார்.

‘மறைந்த தலைவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கு, நெருக்கமாக இருந்ததால், முத்துராமலிங்கம் ஆற்றிய அரும் பணிகள் கண்டுகொள்ளப்படவில்லை’ என, அவர் வருத்தம் தெரிவித்தார்.

அப்போது, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர், அசோக் கஜபதி ராஜு அளித்த பதில்: மாநில அரசுகள்,மத்திய அரசுக்கு அளிக்கும் பரிந்துரைகள் அடிப்படையில் விமான நிலையங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு வருகின்றன.

நாடு முழுவதும், ஒன்பது விமான நிலையங்களின் பெயர்களை மாற்றுவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

காங்., உறுப்பினர், அம்பிகா சோனி பேசுகையில், ”சண்டிகார் விமான நிலையத்துக்கு, பகத் சிங் பெயரை சூட்ட வேண்டும்,” என, வலியுறுத்தினார். அகாலிதளம் உறுப்பினர், நரேஷ் குஜ்ரால் பேசுகையில், சண்டிகார் விமான நிலையத்துக்கு, பகத்சிங் பெயரை சூட்ட, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களின் சட்டசபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

You might also like More from author