அமைதிக்கான நோபல் பரிசு ஐகேன் அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது.

nobel-peace-prize-winner-ican

2017ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, அணு ஆயுத ஓழிப்பிற்காக போராடி வரும் ஐகேன் அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது.சுவீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல் என்ற தொழில் அதிபரின் நினைவாக இந்த பரிசு வழங்கப்படுகிறது வேதியியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதி, இயற்பியல் அல்லது மருத்துவம் ஆகிய துறைகளில் மனித இனத்திற்கு பயன்படும் வகையில் பணியாற்றியோருக்காக இந்த பரிசு வழங்கப்படுவது வழக்கம்.

அந்தவகையில், இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு, நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அறிவிக்கப்பட்டது. அதில், இந்தாண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அணு ஆயுதத்துக்கு எதிரான ’ஐகேன்’ (ICAN) என்ற அமைப்புக்கு அறிவிக்கப்பட்டது.

’ஐகேன்’ (ICAN -International Campaign to Abolish Nuclear Weapons) அமைப்பு என்பது தொடர்ந்து அணு ஆயுதங்களுக்கு எதிராகப் போராடி வருகிறது. இந்த அமைப்பு 10 வருடங்களுக்கு முன்னர், ஆஸ்திரேலியாவில் தொடங்கப்பட்டது. தற்போது ஜெனீவாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவருகிறது.

You might also like More from author