நோக்கியாவின் 5 ஜி ஆய்வு மையம்!

நோக்கியாவின் ஆய்வு மையம் தற்போது கர்நாடக மாநில அமைச்சர் பிரியண்க் கார்ஜ் திறந்து வைத்துள்ளார்.

தற்போது சுமார் 6000 பொறியாளர்கள் பணியாற்றி வருகின்றனர் .தற்போது இது விரிவாக்கப்படுவதால் அதிக ஊழியர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள். , கிளவுட், பிக் டேட்டா அனாலடிக்ஸ், வோல்ட்இ மற்றும் செயலிகள் சார்ந்த பிரிவுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதை விட மிக முக்கியமாக 5ஜி தகவல் பரிமாற்ற தொழில்நுட்பம் சார்ந்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட இருக்கிறது. நோக்கியா நிறுவனம் 5ஜி தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை சோதனை செய்வது தொடர்பாக ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்களுடன் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நோக்கியாவின் இந்த சில புதிய திட்டங்கள் இந்திய வாழ்க்கை முறையை முற்றிலுமாக மாற்றியமைக்கும் என கூறப்பட்டுள்ளது. தகவல்களின் படி 5ஜி தொழில்நுட்பம் வழங்கப்படும் போது பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போன்களில் நொடிக்கு 5.7 ஜிபி என்ற வேகத்தில் தரவுகளை டவுன்லோடு செய்ய முடியுமாம்.

You might also like More from author