வேட்புமனு நிராகரிப்பு பிரதமர், ஜனாதிபதியிடம் விஷால் புகார்.

nomination-issue-vishal-complains-modi-presiden

தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது குறித்து பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகியோரிடம் ட்விட்டர் மூலம் புகார் தெரிவித்துள்ளார் நடிகர் விஷால்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்து வேட்புமனு தாக்கல் செய்தார் நடிகர் விஷால். அவரது வேட்புமனுவை முதலில் நிராகரித்தனர். பின்னர் அவர் முறையிட்ட பிறகு ஏற்கப்பட்டது. அதன் பிறகு மீண்டும் நிராகரிக்கப்பட்டது.

ஜனநாயகம் செத்துவிட்டதாக விஷால் ட்வீட்டியிருந்தார். இந்நிலையில் இது குறித்து விஷால் பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகியோரிடம் ட்விட்டர் மூலம் புகார் தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது, மதிப்பிற்குரிய பிரதமர் மோடி, ஜனாதிபதி அவர்களே, என் பெயர் விஷால். சென்னையில் ஆர்.கே. நகர் தேர்தல் விவகாரத்தில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியும் என நம்புகிறேன்.

என் வேட்புமனு முதலில் ஏற்கப்பட்டு பின்னர் நிராகரிக்கப்பட்டுள்ளது. இது நியாயமே இல்லை. இதை உங்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன். நீதி கிடைக்கும் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

You might also like More from author