இந்தியாவின் தலைநகராக டெல்லி அறிவிக்கபட்ட தினம் இன்று!

India-New-Delhi

கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி முடிந்து பிரிட்டிஷார் காலத்திலும் கொல்கத்தாவே நாட்டின் தலைநகராகவே தொடர்ந்த நிலையில் 1911-ம் ஆண்டு இன்றைய தேதியில் டெல்லிக்கு மாற்றப்பட்டது.

ஐரோப்பியரின் வருகைக்கு முன்னதாக முறையாக கட்டமைக்கப்படாத இந்தியாவே இருந்து வந்தது. பல மாகாணங்கள், சமஸ்தனங்களாக பிரிந்து கிடந்த இந்தியாவுக்கு 18-ம் நூற்றாண்டுகளில் வந்த பிரிட்டிஷார் கொல்கத்தாவை தலைமையிடமாக நிர்ணயித்தனர்.

கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி முடிவடைந்து பின்னர்  காலம் பிரிட்டன் அரசின் கீழ் இந்தியா வந்த பின்னரும் கொல்கத்தாவே தலைநகராக நீடித்தது.

1911-ம் ஆண்டு இதே நாளில் (டிச.12) ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் தலைநகரத்தை டெல்லிக்கு மாற்றும் அறிவிப்பை விடுத்தார்.

1920-ம் ஆண்டுகளில் பழைய டெல்லி நகருக்குத் தெற்கே, புதுடெல்லி என பெயர் பெற்ற புதிய தலைநகரம் அமைக்கப்பட்டது.
1947-ல் இந்திய விடுதலை பெற்ற பின்னர் இதுவே தலைநகராகவும், அரசின் இருப்பிடமாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்திய பாராளுமன்றம், ஜனாதிபதி மாளிகை என பிரசித்தி பெற்ற கட்டிடங்கள் அனைத்தும் புது டெல்லியில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும்,

இந்தியாவின் வர்த்தக தலைநகரமாக மும்பையும், மருத்துவ தலைநகரமாக சென்னையும்,  அறியப்படுகிறது.

 

You might also like More from author